ஐந்தாம் திகதி இலங்கையில் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட மாட்டாது..! வெளியானது அறிவிப்பு
சுதந்திர தினத்திற்கு மறுதினம் விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தப்படமாட்டாது பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை (05) விடுமுறை தினதிற்கு விடுமுறை அளிக்கப்படுமா என எழுப்பப்பட்ட சந்தேகத்திற்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) கொண்டாடப்படவுள்ளது.
இந்த நிலையில் அதற்கு மறுதினமான திங்கட்கிழமை (05) விடுமுறை தினம் என தகவல்கள் பகிரப்பட்டு வந்தது. இதன் போது இது தொடர்பாக எந்தமுடிவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டது."என அவர் கூறினார்.
இந்நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தப்படமாட்டாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இன்று (02) தெரிவித்தார்.
இதன்படி, திங்கட்கிழமை அனைத்து அரச நிறுவனங்களும் வழமை போன்று இயங்கும் எனவும் யசரத்ன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.