டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை : இன்றைய நாணயமாற்று வீதம்..!
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (27) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321 ரூபா 54 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 332 ரூபா 01 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 388 ரூபா 68 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 404 ரூபா 51 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 337 ரூபா 88 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 352 ரூபா 68 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 33 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 241 ரூபா 95 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 16 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 212 ரூபா 39 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபா 40 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 244 ரூபா 04 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.18 ரூபாயாக மாறாமலுள்ள வேளை விற்பனைப் பெறுமதி 332.42 ரூபாயிலிருந்து 331.91 ரூபாயாக குறைவடைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.16 ரூபாயிலிருந்து 320.65 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 330.50 ரூபாயிலிருந்து 331 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 322 ரூபாய் மற்றும் 332 ரூபாயாகவும் மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.