
யாழில் வாள்வெட்டு: ஒரே குடும்பத்தை சேர்ந்தச் இருவர் உட்பட மூவர் படுகாயம்!
யாழ்.கொடிகாமம் வெள்ளாம்கோக்கட்டி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் கொடிகாமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய சுரேந்திரன் வெனிஸ்ரன், வெனிஸ்ரனின் தந்தையான 53 வயதுடைய வேலுப்பிள்ளை சுரேந்திரன் மற்றும் வெள்ளாம்போக்கட்டியை சேர்ந்த 23 வயதுடைய மகேந்திரன் அஜந்தன் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.