இலங்கையில் நடந்த பயங்கரம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி.

இலங்கையில் நடந்த பயங்கரம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி

தம்புத்தேகம - ஈரியகம பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

வான் ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகலில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியோரத்தில் நிற்க தயாரான போது, ​​அதே திசையில் பயணித்த வான் ஒன்று லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் நடந்த பயங்கரம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி | Four Persons Reported Dead 4 Others Injured

உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் 36 மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும் ஆண்கள் 36 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கஹட்டலஸ்திகிலிய பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் நடந்த பயங்கரம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி | Four Persons Reported Dead 4 Others Injured

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் 55, 11, 06 மற்றும் 08 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதிக வேகத்துடன் வேனை ஓட்டி வந்த சாரதியினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் லொரியுடன் மோதியதனால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.