தெல்லிப்பளையில் கூரிய ஆயுதங்கள் மீட்பு
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலில் வாள்வெட்டுகுழு பயன்படுத்தியதாக கூறப்படும் கூரிய ஆயுதங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பளையில் இன்று காலை இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.