பிள்ளையை பாடசாலையில் சேர்க்கச் சென்ற பெண் மீது கணவர் கூரிய ஆயுதத்தினால் தாக்குதல்
கேகாலை - தேவாலேகம பகுதியில் தமது பிள்ளையை முதலாம் தரத்திற்கு சேர்ப்பதற்காக பாடசாலைக்கு சென்ற தாய் ஒருவர், தமது கணவனின் தாக்குதலில் பலத்த காயமடைந்துள்ளார்.
பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வைத்து குறித்த பெண், தமது கணவரினால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்து, கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேவாலேகம காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் பெண்ணின் கழுத்து மற்றும் கை ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தேவாலேகம, மா ஓயா வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணொருவரே சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
காயமடைந்த பெண்ணின் கணவர், சில காலமாக போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்ததாகவும், தொலைபேசியில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக அவர் கூரிய ஆயுதத்தினால் மனைவியை தாக்கியுள்ளதாகவும் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.