அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 319 ரூபா 84 சதமாகவும், விற்பனை பெறுமதி 335 ரூபா 68 சதமாகவும் பதிவாகியுள்ளது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்க டொலர் மற்றும் ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு உயர்ந்து வந்திருந்தது.

எனினும், கடந்த வெள்ளிக்கிழமை (10) முதல் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு மீண்டும் சரிந்து வருகிறது.


No description available.