
புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள பொது நிதிக்குழுவின் தலைவர் பதவி
நாடாளுமன்ற பொது நிதிக் குழுவின் தலைவர் பதவிக்கான மோதல் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது,
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவை குழுவுக்கு தற்காலிக தலைவராக நியமித்த நிலையிலேயே இந்த முறுகல்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் புதிய நியமனம், நிலையியல் கட்டளைகளை மீறுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.
தற்காலிக அடிப்படையில் தலைவர் நியமனம், என்பது, குறித்த குழுவை பொறுத்த வரை நடைமுறையில் இல்லை என ஹர்ஷா டி சில்வா தெரிவத்துள்ளார்.
வஜிர அபேவர்தனவை அந்த பதவிக்கு நியமித்தமை நிலையியற் கட்டளைகளை மீறும் செயலாகும்.
குழுவுக்கான தலைவர் எதிர்க்கட்சியில் இருந்து வர வேண்டும்.
அறிவிக்கப்பட்ட உத்தரவுகளின் படி குறித்த பதவிக்கு பதில் தலைவர் ஒருவரை நியமிக்க எந்தவொரு ஏற்பாடும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் நாடாளுமன்ற பொதுநிதிக்குழு தலைவர் பதவி தொடர்பான இறுதி முடிவு நாளைய தினம் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.