இன்று முதல் அமுலாகும் வகையில் 6 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
இன்று (26) முதல் அமுலாகும் வகையில் சதொசவினால் அரிசி, பருப்பு உள்ளிட்ட ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாயின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காய்ந்த மிளகாய் கிலோ ஒன்றின் புதிய விலை 1,700 ரூபாவாகும்.
வெள்ளை பச்சையரிசி கிலோ ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் 169 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
சிவப்பரிசி கிலோவொன்று 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 179 ரூபாவாகும்.
உள்நாட்டு வெள்ளை நாடு கிலோவொன்று 5 ரூபாவாலும், கீரி சம்பா கிலோவொன்று 4 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, வெள்ளை நாடு கிலோவொன்று 184 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் கீரி சம்பா 235 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.
அத்துடன் சிவப்பு பருப்பு கிலோவொன்று 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளன.
அதன் புதிய விலை 365 ரூபாவாகும் என சதொச அறிவித்துள்ளது.