
பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடமைகளை பொறுப்பேற்றார்!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
நேற்றைய தினம் இலங்கையின் 26 ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க, நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
கொழும்பு - கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இந்த பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றிருந்தது.