இன்று மின் துண்டிப்பு அமுலாகும் நேரங்கள் தொடர்பான அறிவிப்பு!

இன்று மின் துண்டிப்பு அமுலாகும் நேரங்கள் தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் இன்றைய தினமும் ஒரு மணிநேரம் மாத்திரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய இன்றைய தினம் A முதல் W வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலம் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.

CC1 வலயத்தில் காலை 6 மணிமுதல் முற்பகல் 9.30 வரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின்வெட்டினை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை மற்றும் நாளை மறுதினம் A முதல் L வரையான வலயங்களில் காலை 8.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலமும் 15 நிமிடமும்,

மாலை 5.30 முதல் இரவு 10.45 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 45 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது.

அத்துடன் P முதல் W வரையான வலயங்களில் முற்பகல் 10.45 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும்,

மாலை 5.30 முதல் இரவு 10.45 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 45 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தமிழ், சிங்களப் புத்தாண்டு காலமான எதிர்வரும் 13ஆம், 14ஆம் 15 ஆம் திகதிகளில் நாட்டில் மின்தடை அமுலாக்கப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எனினும், எதிர்வரும் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் A முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும், 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் துண்டிப்பு தொடர்பான கால அட்டவணை