எல்லைத்தாண்டிய இலங்கை மீனவர்கள் கைது!
இலங்கை கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கையைச் சேர்ந்த 2 மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, மீனவர்களின் நாட்டுப்படகுகளும் இந்திய கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1.நிமலதாஸ்
24/21
த. பெ குல வீரசிங்கம்
ஆதி கோவிலடி தெரு
வல்வெட்டித்துறை,
யாழ்ப்பாணம்.
2.கஜிபன் 23/21
த. பெ தர்மராஜ்
ஆதி கோவிலடி தெரு,
வல்வெட்டித்துறை.
யாழ்ப்பாணம்
ஆகிய விலாசத்தை சேர்ந்த இருவரும் நேற்று முன்தினம் (21) தங்களது ஊரில் இருந்து OFRP-A-5948 என்ற படகில் மீன்பிடிக்க புறப்பட்டவர்கள் கோடியகரைக்கு கிழக்கே 16.5 NM தொலைவில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இந்திய கடற்படையால் (IN SHIP INS BANGARAM) எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக நேற்று (22) மாலை 5.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் நாகப்பட்டினம் கடற்படையால் இன்று (23) அதிகாலை 01.00 மணிக்கு வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளரிடம் ஒப்படைக்கபட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதி துறை நடுவர் முன் ஆஜர்படுத்தபட உள்ளனதாக தெரிவிக்கப்படுகிறது.