நேற்று 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

நேற்று 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாட்டில் நேற்று 239,650 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, 15,548 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 93,434 பேருக்கும் இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

6,332 பேருக்கு அஸ்ட்ராசெனகா முதலாம் தடுப்பூசியும், 805 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், 73,308 பேருக்கு மொடர்னா இரண்டாம் தடுப்பூசி, 15 பேருக்கு முதலாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

1,692 பேருக்கு ஸ்புட்னிக்-வி இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

48,320 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 196 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன