ஆளும் கட்சியின் பிரதி அமைப்பாளராக சாகர காரியவசம் நியமனம்!

ஆளும் கட்சியின் பிரதி அமைப்பாளராக சாகர காரியவசம் நியமனம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் ஆளும் கட்சியின் பிரதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமன கடிதம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் பிரதி அமைப்பாளராக பதவி வகித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த கெட்டகொட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.