மேல் மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இம்மாதம் முடிவடைவதற்குள் கொவிட் தடுப்பூசி செலுத்துமாறு அறிவுறுத்தல்!
மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர், தடுப்பூசிகளைச் செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சுகாதாரத்துறையை அறிவுறுத்தியுள்ளார்.
தடுப்பூசி ஏற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் என்பன குறித்து, கொவிட் கட்டுப்பாட்டு விசேட செயலணியுடன், ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில், ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.