எம்.எஸ்.சி மெசீனா கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது

எம்.எஸ்.சி மெசீனா கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது

எம்.எஸ்.சி மெசீனா கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, குறித்த கப்பலை சிங்கப்பூர் நோக்கி கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கிரிந்தை - மஹா இராவணன் கலங்கரை விளக்கத்தில் இருந்து கிழக்கு திசையில் 480 கடல்மைல்களுக்கு அப்பால், எம்.எஸ்.சி. மெசீனா என்ற குறித்த கொள்கலன் கப்பலில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் தீப்பரவல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.