அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் சகல கொவிட் திரிபுகளுக்கு எதிராக செயற்படக் கூடியவை - WHO
தம்மால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து கொவிட் தடுப்பூசிகளும் கொரோனா வைரஸின் அனைத்து இனந்தெரியாத திரிபுகளுக்கு எதிராக வினைத்திறனாக செயலாற்றக்கூடியவை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போதைய கொவிட் அலைக்கு காரணமான வைரஸ் திரிபுகளும் இதில் உள்ளடங்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.