
பயணப் பொதியிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து வெளியான தகவல் (காணொளி)
கொழும்பு, டேம் வீதியில் பெண் ஒருவரின் சடலத்துடன் கூடிய பயணப் பொதியொன்று நேற்று மீட்கப்பட்டது.
இந்த பயணப் பொதி ஹன்வெல்ல பகுதியில் இருந்து கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த நபர் ஹன்வெல்லவிலிருந்து கொழும்பு நோக்கி பிரயாணித்த ஒரு தனியார் பேருந்தில் இந்த பயணப் பொதியை கொண்டு வந்துள்ளார் என விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, இந்த பொதியானது மீட்கப்பட்டதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர், பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குறித்த பயணப்பொதியை வைத்துச் செல்லும் காட்சி சீ.சீ.டி.வி கமராக்களில் பதிவாகியுள்ளன.
இதனை அடிப்படையாகக் கொண்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன்,சடலமாக மீட்கப்பட்ட பெண் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை