ஏப்ரல் 21 தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபருக்கு
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் முதல் பகுதி ஜனாதிபதியின் செயலாளரின் ஊடாக சட்டமா அதிபருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இந்த அறிக்கையின் ஏனைய பக்கங்களையும் ஒப்படைக்குமாறு சட்டமா அதிபர் ஜனாதிபதியின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்