நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான விபரங்கள்

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான விபரங்கள்

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 519 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள நாளாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 120 பேருக்கு நேற்று தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் கண்டி மாவட்டத்தில் 85 பேருக்கும் கம்பஹா மாவட்டத்தில் 64 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் 247 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது