பாடசாலை சென்ற முதலாம் வகுப்பு மாணவன் பார ஊர்தி மோதி பலி!
முதலாம் வகுப்பில் இணைவதற்கு இன்று (15) காலை தாயுடன் பாடசாலைக்கு சென்ற மாணவர் ஒருவர் பார ஊர்தி மோதி உயிரிழந்த சம்பவம் பதுளையில் பதிவாகியுள்ளது.
பதுளை - அசேலபுரவில் வசித்து வந்த வருண் பிரதீஷ் என்ற மாணவனே விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த தாய் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் பாரவூர்தியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,இது குறித்த மேலதிக விசாரணைகள் பதுளை காவல்துறையினரால் மேற்கொள்ளப்படுகின்றன
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026