தீக்கிரையாக்கப்பட்ட மஞ்சள்..!
ஹுங்கம கலமெட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து காவல் துறை விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்ட 20 கிலோகிராம் எடையுடைய மஞ்சள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
காவல் துறை மா அதிபரின் உத்தரவிற்கு அமையவும், சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கிணங்கவும் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமையவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.