
பராக்கிரமபாகு சமுத்திரத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது..!
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழச்சி பதிவாகக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணத்தில் நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்குஇ வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்றைய தினம் மழையுடனான வானிலை நிலவும்.
ஏனைய பகுதினகளில் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இன்று 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துதுடன், அதிக மழை காரணமாக பொலன்னறுவையில் பராக்கிரமபாகு சமுத்திரத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு பெய்து வரும் பலத்த மழை காரணமாக இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.