பயணிகளுக்கான பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன...!

பயணிகளுக்கான பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன...!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பயணிகளுக்கான பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பேருந்தின் ஆசனங்களின் எண்ணிக்கைகளுக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றுவதற்கு சுகாதார பிரிவு வழங்கிய வழிகாட்டுதலை கருத்திற் கொண்டு இவ்வாறு கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இதன்படி, ஆக குறைந்த பேருந்து கட்டணமான 12 ரூபாவை, 14 ரூபாவாக அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பேருந்து கட்டணங்கள் 20 சதவீதம் அதிகரித்த போதிலும், இன்றைய தினம் பேருந்து சேவைகள் வழமைக்கு திரும்பாது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

பேருந்துகளில் உள்ள இருக்கைகளுக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் பேருந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியினை பேணுவது தொடர்பில் இன்றைய தினம் சகல தொழிற்சங்கங்களுடனும், கலந்துரையாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.