
அமெரிக்காவில் தொடரும் போராட்டம்..!
அமெரிக்காவின் மினஸோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரத்தில் கடந்த வாரம் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிலாய்ட் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த காவல்துறையினர், அவரை பொது இடத்தில் கழுத்தின் மீது காலால் இருக்கி தாக்குதல் நடத்தினர்.
இதில் அந்த நபர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகியது.
இதனை தொடர்ந்து இந்த இனவெறி தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள கருப்பின மக்கள் வெகுண்டெழுந்து கடந்த 9 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீதிகளில் குவியும் போராட்டக்காரர்கள் கட்டிடங்கள், வாகங்களுக்கு தீவைப்பதோடு பொது சொத்துக்களையும் சேதப்படுத்தி வருகின்றனர்.
இதனால் மினியாபோலிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், ஆக்லாண்ட் உள்ளிட்ட நகரங்களில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர் குலைந்துள்ளது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் மாகாண அரசுகள் திணறி வருகின்றன.