பிரெண்டிக்ஸ் ஆடைதொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...!
மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதோடு, அவருடடன் நெருங்கிய உறவினை பேணிய ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1034 ஆக அதிகரித்துள்ளது.