வாகன கொள்வனவாளர்களுக்கு அரசாங்கம் விடுக்கும் செய்தி

வாகன கொள்வனவாளர்களுக்கு அரசாங்கம் விடுக்கும் செய்தி

இறக்குமதி செய்யப்படுகின்ற வாகனங்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாது என வாகன ஒழுங்குறுத்துகை, பேருந்து போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.

இலங்கையில் வாகனங்களை தயாரிக்கும் நோக்கிலேயே, அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்காலத்திலும் இறக்குமதி செய்யப்படுகின்ற வாகனங்களின் விலைகள் குறைக்கப்படாது என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகன இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது

இந்த நிலையில், வாகன விநியோகஸ்தர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், வினவிய போதே, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்தத் திட்டத்தின் ஊடாக பாரிய அளவிலான அந்நிய செலாவணியை குறைக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போது நாட்டில் வாகனப் பற்றாக்குறை ஏற்படவில்லை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்