அதிகரிக்கும் எண்ணிக்கை - டூடுள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூகுள்

கூகுள் தேடுப்பொறி சேவையில் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் டூடுள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

கூகுள் நிறுவனம் இன்று வெளியிட்டு இருக்கும் டூடுள் பொது மக்களை முகக்கவசம் அணிய வலியுறுத்துகிறது. பொதுநல நோக்கில் வெளியிடப்பட்டு இருக்கும் டூடுளுடன் `முகக்கவசம் அணியுங்கள். உயிர்களை காப்பாற்றுங்கள்' என கோரும் தகவல் இடம்பெற்று இருக்கிறது.

 

 

 கூகுள் டூடுள்

 

இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாகி இருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றக்கோரி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான தேவை அதிகரித்து உள்ளது.

 

விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேஷ டூடுளில் கூகுள் எழுத்துக்கள் உருவங்களாக வடிவமைக்கப்பட்டு முகக்கவசம் அணிந்து இருப்பது போன்று உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் `முகக்கவசங்கள் மிகவும் முக்கியமானவை. முகக்கவசம் அணிந்து உயிர்களை காப்பாற்றுங்கள்' எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது