Breaking News
Home / Uncategorized / கடன் பெற்றுத்தர மனைவி மறுத்ததால் கணவன் தற்கொலை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கடன் பெற்றுத்தர மனைவி மறுத்ததால் கணவன் தற்கொலை

மட்டக்களப்பு மாவடிவேம்பு பகுதியில் நேற்று (10) குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மாவடிவேம்பு, சம்பந்தர் வீதியைச் சேர்ந்த 26 வயது நிரம்பிய மேகராசா யோகராசா என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் நான்கு நுண்கடன் நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக மேலும் ஒரு நுண்கடன் நிறுவனத்தில் கடன் பெற்றுத்தருமாறு மனைவியிடம் கோரியுள்ளார்.

அதற்கு மனைவி, இனிமேல் கடன் பெற்றுத்தர முடியாது என மறுப்பு தெரிவித்தமையினால் மனையியுடன் சண்டையிட்ட பின்னர் கோபத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சடலம் பிரதே பரிசோதனைக்காக, செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகள் நடைபெறுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Check Also

இம்முறை O/L மற்றும் A/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்

இந்த வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சார்த்திகள், தேசிய அடையாள அட்டையை …