உயிரிழந்த பெண்ணை பொலிஸார் தகனம் செய்தமைக்கான காரணம் என்ன – தேசிய பெண்கள் ஆணையம் கேள்வி!

உயிரிழந்த பெண்ணை பொலிஸார் தகனம் செய்தமைக்கான காரணம் என்ன – தேசிய பெண்கள் ஆணையம் கேள்வி!

கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிய நிலையில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை பொலிஸார் தகனம் செய்தமை குறித்து விளக்கமளிக்குமாறு தேசிய பெண்கள் ஆணையம் டி.ஜி.பிக்கு கடிதம் எழுதியுள்ளது.

குறித்த கடிதத்தில் “அந்த இளம்பெண் உடலை குடும்பத்தினரை ஒதுக்கி வைத்து விட்டு நள்ளிரவு நேரத்தில் எரிப்பதற்கு பொலிஸார் அவசரம் காட்டியது ஏன்? என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். விரைவிலேயே இந்த கடிதத்திற்கான பதிலை அனுப்புங்கள்’ எனக்  கூறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் வயலில் வேலை செய்துகொண்டிருந்த போது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் வயல் வெளியில் இருந்து கண்டெடுக்கப்பட்டார்.

பின் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர்  சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில் அந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் பொலிஸாரே தகனம் செய்துள்ளனர். இந்த விடயம்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.