பிரதமரின் தலைமையில் சீன மக்கள் குடியரசின் தேசிய தின நிகழ்வு!

பிரதமரின் தலைமையில் சீன மக்கள் குடியரசின் தேசிய தின நிகழ்வு!

ஸ்ரீலங்காவிலுள்ள சீனா சங்கத்தின் ஏற்பாட்டில் சீன மக்கள் குடியரசின் 71ஆவது தேசிய தின கொண்டாட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

சிங் வம்சத்தின் வீழ்ச்சி, வுச்சங் கிளர்ச்சி மற்றும் சீன மக்கள் குடியரசின் ஆரம்பம் என்பவற்றை நினைவுகூரும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 1ஆம் திகதி சீனா தனது தேசிய தினத்தை கொண்டாடுகிறது.

இதன்போது சீன அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிய மட்ட சித்திரப் போட்டியில் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பெற்றுக் கொண்டவர்களுக்கு பிரதமரினால் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன், சீன - ஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்களினால் நடத்தப்பட்ட சித்திர கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார்.

குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன, ஸ்ரீலங்காவிற்கான சீன பதில் தூதுவர் ஹு வெய், ஸ்ரீலங்காவிலுள்ள சீனா சங்கத்தின் தலைவர் ஜெனத் டி சில்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.