இன்றைய தினமும் முன்னெடுக்கவுள்ள நுகர்வோர் அதிகார சபையினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்

இன்றைய தினமும் முன்னெடுக்கவுள்ள நுகர்வோர் அதிகார சபையினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்

தேங்காயின் சுற்றளவுக்கு அமைய நிர்ணயிக்கப்பட்டு விலைக்கு தேங்காயினை விற்பனை செய்யாவிடின் எதிர்கலத்தில் சுற்றிவளைப்புக்களை முன்னெடுத்து வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்றைய தினமும் நாட்டின் அனைத்து மாவட்டங்கங்களிலும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகளை பயன்படுத்தி வர்த்தகர்களுடன் நுகர்வோருக்கும் அது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு அமைய 13 அங்குலங்களுக்கு மேல் சுற்றளவு கொண்ட தேங்காய் ஒன்றின் உச்சபட்ச சில்லறை விலை 70 ரூபாவாகும்.

12 முதல் 13 அங்குல சுற்றளவு கொண்ட தேங்காய் ஒன்றின் விலை 65 ரூபாவாகும்.

12 அங்குலத்தை விடவும் குறைந்த சுற்றளவு கொண்ட தேங்காய் ஒன்றின் விலை 60 ரூபாவாகவும் நிரணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆகக் கூடுதலான சில்லறை விலைகளுக்கு மேலாக உற்பத்தியாளர், விநியோகஸ்தர் அல்லது வியாபாரி என எவரும் விற்பனை செய்யவோ விற்பனைக்கு விடவோ விற்பனைக்கு வெளிப்படுத்தவோ அல்லது விற்பனைக்காக காட்சிப்படுத்தவோ முடியாது என கட்டளையிடப்பட்டுள்ளது.