உலக சுகாதார ஸ்தாபனம் முன்னெடுக்கவுள்ள முக்கிய வேலைத்திட்டம்

உலக சுகாதார ஸ்தாபனம் முன்னெடுக்கவுள்ள முக்கிய வேலைத்திட்டம்

கொவிட் 19 தொற்றுறுதியானவர்களை குறைந்தளவான நிமிடங்களில் பரிசோதனைகளின் மூலம் கண்டறிவதற்கான வேலைத்திட்டம் ஒன்றினை உலக சுகாதார ஸ்தாபனம் முன்னெடுக்கவுள்ளது.

133 நாடுகளை உள்ளடக்கிய இந்த திட்டத்தில், கொவிட் 19 தொற்றுறுதியானவர்களை 15 முதல் 30 நிமிடங்களுக்குள் கண்டறிவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கொவிட் 19 தொற்றுறுதியானவர்களை அடையாளம் காணுவதற்கான கால எல்லை நீடிப்பதால் அது மேலும் பரவும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாரிய பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறைந்த நிமிடங்களில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களை அடையாளம் காணுவதால் அவ்வாறான நாடுகளுக்கு பாரிய நன்மை ஏற்படும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.