இத்தாலியில் உள்ள இலங்கையர்களுக்கு நற்செய்தி

இத்தாலியில் உள்ள இலங்கையர்களுக்கு நற்செய்தி

இத்தாலியில் வாழும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் 6 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு விசா அனுமதி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்ளக விவகார அமைச்சு தெரிவித்துள்ளது... ஜுன் மாதம் முதலாம் திகதி அமுல்படுத்தப்படும் பொது மன்னிப்பு காலத்தில் புதிய சட்டம் மூலம் இந்த விசா வழங்கப்படவுள்ளதாக குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் ஜுலை மாதம் 15ஆம் திகதி வரையிலான 45 நாட்களுக்குள் இந்த விசா அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என இத்தாலிய உள் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தாலியில் முன்னெடுக்கவுள்ள இந்த நடவடிக்கையின் கீழ் அந்த நாட்டில் விசா இன்றி வசிக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு விசா கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாலியில் உள்ள சட்டவிரோத இலங்கையர்களுக்கு புதிய விமான அனுமதி பத்திரம் பெறுவதற்காக இத்தாலி நகரத்தில் உள்ள இலங்கை தூரகம் மற்றும் மிலான் நகர உயர் ஸ்தானிகரலாயத்தில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விமான அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வதற்கு அவசிய ஆலோசனைகளை தூதரக இணையத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் பணியாற்றும் இலங்கை தூதுவர் சிசிர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.