சட்டவிரோதமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட தசைப்பிடிப்பு நிலையங்கள்

சட்டவிரோதமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட தசைப்பிடிப்பு நிலையங்கள்

அம்பலாங்கொடை பிரதேச்தில் அனுமதிப் பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட 2 தசைப்பிடிப்பு நிலையங்களில் காவல்துறையினர் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது, ஒன்பது பெண்கள் உள்ளிட்ட 11 சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

நேற்று பிற்பகல் (27) இந்த விசேட சோதனை நடத்தப்பட்டதாகவும், இதன்போது ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் தொற்றுநோய் தடுப்புக்கான முறையான நடவடிக்கைகள் இல்லாமலும் மருத்துவ சான்றிதல்கள் பெற்றுக்கொள்ளாமையின் காரணமாகவும் நோய்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குத் தொடரப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் ஒன்பது பேரும் 18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதோடு, இவர்கள் அனைவரும் பொலனறுவை, கொழும்பு, மத்துகம, வெல்லவாய, பலாங்கொடை மற்றும் வீரகெடிய ஆகிய பகுதிகளில் வசித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சந்தேக நபர்களை இன்றைய தினம் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.