சர்வதேச ரீதியில் ஒரு மில்லியனைக் கடந்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை

சர்வதேச ரீதியில் ஒரு மில்லியனைக் கடந்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை

உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது ஒரு மில்லியனைக் கடந்துள்ளது. 

சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் மரணங்களின் மொத்த எண்ணிக்கையானது 1,000,202ஆக பதிவாகியுள்ளது.

மேலும், கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 31 இலட்சத்து 77,416ஆக பதிவாகியுள்ளது.

அத்தோடு குறித்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 45 இலட்சத்து 4,931ஆக காணப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் இதுவரையில் 72 இலட்சத்து 94 ஆயிரத்து 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அங்கு இதுவரையில் 2 இலட்சத்து 9 ஆயிரத்து 236 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கு அடுத்ததாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 94 ஆயிரத்து 971 மரணங்கள் பதிவாகியுள்ளதோடு அங்கு இதுவரையில் மொத்தமாக 60 இலட்சத்து 41 ஆயிரத்து 638 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த பட்டியில் மூன்றாவதாக பிரேசில் காணப்படுவதோடு, அங்கு இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 141,441 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.