கொரோனாவால் பிரித்தானிய அரச குடும்பத்துக்கு ஏற்பட்டநிலை

கொரோனாவால் பிரித்தானிய அரச குடும்பத்துக்கு ஏற்பட்டநிலை

கொரோனா நெருக்கடி காரணமாக, பிரிட்டன் அரச குடும்பத்து வருமானம் குறைந்து போனதால், அரசி எலிசபெத் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தேவையான நிதியில் 3.5 கோடி பவுண்ட் (சுமாா் ரூ.328 கோடி) பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அரசு குடும்பத்து ஆண்டுக் கணக்கு விபரங்கள் தெரிவித்திருப்பதாவது

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, பக்கிங்ஹாம் அரண்மனை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் அரச குடும்பத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், அடுத்த 3 ஆண்டுகளுக்குத் தேவையான நிதியில் 1.5 கோடி பவுண்ட் பற்றாக்குறை உள்ளது. மேலும், 10 ஆண்டுகளில் 2.5 கோடி பவுண்ட் நிதிப் பற்றாக்குறை ஏற்படும் என்று அந்த ஆண்டுக் கணக்கு விவரங்கள் தெரிவிக்கின்றன.