மஹிந்த கோட்டாபய தலைமையில் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் கூட்டப்பட்ட கூட்டம்!

மஹிந்த கோட்டாபய தலைமையில் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் கூட்டப்பட்ட கூட்டம்!

கடந்த 28 ஆண்டுகளுக்குப் பின் ஏற்றுமதி மேம்பாட்டு அபிவிருத்தி சபைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆதரவில் கூட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஏற்றுமதி மேம்பாட்டு அபிவிருத்தி சபையின் முதல் கூட்டம் நேற்று 23 ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஏற்றுமதி மேம்பாட்டுச் சட்டத்தின்படி, ஜனாதிபதிக்குத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இத்துறையில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்ய ஏற்றுமதி மேம்பாட்டு சபை மாதத்திற்கு ஒரு முறை கூடி ஆலோசிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.

ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான ஏற்றுமதி மேம்பாட்டுச் சபைக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வலியுறுத்தினார், மேலும் ஒவ்வொரு நாட்டின் தேவைகளுக்கும் ஏற்ப ஏற்றுமதி துறையில் பல் வகைப்படுத்தலின் அவசியத்தை விளக்கினார்.

பொது மற்றும் தனியார் துறைகளின் ஏற்றுமதித் துறைகளை அபிவிருத்தி செய்வதும், உலகளாவிய சந்தையை வெல்வதன் மூலம் மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும் சபையின் நோக்கம் என ஜனாதிபதி இதன் போது வலியுறுத்தியுள்ளார்.

கையெழுத்திடப்பட்ட பல சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள் நாட்டிற்கு நன்மை ஏற்படுத்துவதில்லை என்றும், அவை விரைவாக மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்றும், இதனால் நாடு பயனடையவும், அதிக நன்மைகளைப் பெறவும் முடியும் என ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஏற்றுமதித் துறையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அதன் முன்னேற்றத்திற்குத் தீர்வு காண தேசிய வர்த்தகக் கொள்கையின் திருத்தம் மற்றும் நவீனமயமாக்கலை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.

எவ்வாறாயினும், ஏற்றுமதியாளர்களை ஊக்கப்படுத்தும் தேவையற்ற விதி கள் மற்றும் விதிமுறைகள் நீக்கப்பட வேண்டும் என்று பொருளாதார மறுமலர்ச்சி தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைமை பணியாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.