ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு எச்சரிக்கை!

ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு எச்சரிக்கை!

ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுவதால் வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

மத்திய மலைநாட்டில் தொடரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக குறித்த பிரதேசங்களில் அதிக பனிமூட்டம் காணப்படுகின்றது.

மழையுடனான காலநிலையால் வீதிகளில் வழுக்கும் தன்மை காணப்படுவதால் சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வாகனங்களில் மின்குமிழ்களை ஒளிரவிட்டு வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.