இன்றைய ராசிபலன் 13/09/2020

இன்றைய ராசிபலன் 13/09/2020

மேஷம்

மேஷம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். புதுவேலை கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் விமர்சனங் களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்பு கள் பூர்த்தியாகும் நாள்.


ரிஷபம்

ரிஷபம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். சுப நிகழ்ச்சிகளிலும் விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். வியாபாரத்தில் வாடிக்கையா ளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.


மிதுனம்

மிதுனம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.


கடகம்

கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். இரண்டாம் முயற்சியில்சில காரியங்கள் முடிவடையும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர் கள். உத்தியோ கத்தில் விமர்சனங் களையும் தாண்டி முன்னேறு வீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


சிம்மம்

சிம்மம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.


கன்னி

கன்னி: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உற்சாகமான நாள்.


துலாம்

துலாம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் சந்திப்பு நிகழும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் தலைமை யின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்:  பிரச்சினைகளின் ஆணி வேரை கண்டறிவீர்கள். பிள்ளை களை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமு கமாவார்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.


தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் இருப் பதால் எந்த விஷயத்திலும்  அறிவுப்பூர்வமாக முடிவெடுக் கப்பாருங்கள். முன்கோபத்தை குறையுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.


மகரம்

மகரம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். மனைவி வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. புது நட்பு மலரும். வியாபாரத்தில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.


கும்பம்

கும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலி ருந்து நல்ல செய்தி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


மீனம்

மீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.