ரணில் விக்ரமசிங்கவின் கேள்விக்கு பதிலடி கொடுத்த பவித்ரா வன்னியாராச்சி

ரணில் விக்ரமசிங்கவின் கேள்விக்கு பதிலடி கொடுத்த பவித்ரா வன்னியாராச்சி

கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பினால் இலங்கைக்கு 230 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கருத்தை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மறுத்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பினால் இலங்கைக்கு 230 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாகவும், இந்த பணத்திற்கு என்ன நடந்தது என்று சுகாதார அமைச்சரிடம் ரணில் பகிரங்கமாக கேள்வியை முன் வைத்திருந்தார். இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி,

கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பினால் இலங்கைக்கு 1.9 மில்லியன் அமெரிக்க டொலரே கிடைத்தது. இது தொடர்பான கடிதம் தன்னிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

2 மில்லியன் அமெரிக்க டொலரை 230 மில்லியன் அமெரிக்க டொலர் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை முழுப்பொய் என தெரிவித்துள்ளார்.