நிலையான அபிவிருத்தி நோக்கங்கள் குறித்த ஐவர் கொண்ட குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

நிலையான அபிவிருத்தி நோக்கங்கள் குறித்த ஐவர் கொண்ட குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

நிலையான அபிவிருத்தி நோக்கங்கள் குறித்த ஐவர் கொண்ட குழுவின் அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் உறுப்பினர்களினால் நேற்று(வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் வைத்து இந்த அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

வெளிவிவகார அமைச்சரின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட்ட இந்த ஐவர் கொண்ட குழுவின் தலைவராக வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் அஹமட் ஜாவிட் செயற்படுகின்றார்.

பிரதமரின் மேலதிக செயலாளர் அன்டன் பெரேரா, கலாநிதி லொயிட் லொயிட் பெர்னான்டோ, பேராசிரியர் சி.எஸ்.வீரரத்ன மற்றும் சாமிந்ரி சபரமாது ஆகியோர் குழுவின் சக உறுப்பினர்களாக காணப்படுகின்றனர்.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் ஆலோசனையின் பேரில் 2030ஆம் ஆண்டு உலகளாவிய நிலையான அபிவிருத்தி இலக்கை கருத்திற்கொண்டு இலங்கையின் நிலையான அபிவிருத்தி நோக்கங்களை ஆராய்வதற்கு இந்த ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது.

குறித்த அறிக்கையை பிரதமரிடம் கையளிக்கும் நிகழ்வில், குழு உறுப்பினர்களுக்கு மேலதிகமாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ண உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.