20 ஆவது திருத்தத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் அவசியம் – முன்னாள் சபாநாயகர்

20 ஆவது திருத்தத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் அவசியம் – முன்னாள் சபாநாயகர்

அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் அவசியம் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் மீது இன்னமும் கவனம் குவிக்கப்படாத நிலையில், அதன் உள்ளடக்கங்கள் தொடர்பாக மக்கள் போதியளவு தெளிவடையாத நிலையே காணப்படுகின்றது.

அதிலுள்ள முன்மொழிவுகள் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருப்பதனால் அவை தொடர்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள், மதத்தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளடங்கலாகப் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக அதனையொரு வெள்ளைக் காகிதமாகக் கருதி, அவை குறித்து மக்கள் மத்தியில் விரிவான கலந்துரையாடலை ஏற்படுத்தவேண்டும். அதேவேளை இந்த 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு அவரசம் காட்டக்கூடாது.” என பதிவிட்டுள்ளார்.