“நாங்கள் யாருக்கும் அடிபணிய மாட்டோம்” சீனாவுக்கு பதிலடி கொடுத்துள்ள அவுஸ்திரேலியா

“நாங்கள் யாருக்கும் அடிபணிய மாட்டோம்” சீனாவுக்கு பதிலடி கொடுத்துள்ள அவுஸ்திரேலியா

ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் சீனாவின் மிரட்டல்களுக்கெல்லாம் நாம் அடிபணிய மாட்டோம் என்று அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா சீனா இடையே ஆண்டுக்கு ரூ.18 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கொரோனா விவகாரத்தில் அவுஸ்திரேலியாவின் நிலைப்பாட்டினால் அவுஸ்திரேலியாவிலிருந்து மாட்டிறைச்சிக்கு சீனா தடை விதித்தது. பார்லி இறக்குமதிக்கு அதிக கட்டணம் வசூலித்தது.

மேலும் அவுஸ்திரேலியாவில் இனவெறி தாக்குதல் நடைபெறுவதால் சீனர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்றும் சீனா தெரிவித்தது. இந்நிலையில் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கருத்து தெரிவிக்கையில்,

“நாங்கள் வெளிப்படையாக வர்த்தகம் மேற்கொள்ளும் நாட்டைச் சேர்ந்தவர்கள். எனவே தேவையற்ற மிரட்டல்களுக்கெல்லாம் அடிபணிய மாட்டோம். எங்கள் மதிப்புகளை நாங்கள் விற்கத் தயாராக இல்லை.” என பதிலடி கொடுத்துள்ளார்.