24 மணித்தியாலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

24 மணித்தியாலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 இலட்சத்து 18 ஆயிரத்து 177 ஆக உயர்வடைந்துள்ளது.

கொவிட்-19 தொற்றால் உலகளாவிய ரீதியாக 8 இலட்சத்து 54 ஆயிரத்து 194 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில், ஒரு கோடியே 79 இலட்சத்து 16 ஆயிரத்து 562 பேர் குணமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணித்தியாலங்களில் கொவிட்-19 தொற்றுக்காரணமாக இந்தியாவில் 818 பேர்& மரணித்துள்ளனர்.

இந்தியாவில் 36 இலட்சத்து 87 ஆயிரத்த 937 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள நிலையில், 68 ஆயிரத்த 770 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

62 இலட்சத்து 9 ஆயிரத்து 514 பேருக்கு அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில், ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேஸிலில் 39 இலட்சத்து 10 ஆயிரத்து 901 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள நிலையில், ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 515 பேர் உயிரிழந்துள்ளனர்.