ஈஸ்டர் தாக்குதலுக்கு யார்பொறுப்பு: முன்னாள் கல்வியமைச்சர் வெளியிட்ட தகவல்

ஈஸ்டர் தாக்குதலுக்கு யார்பொறுப்பு: முன்னாள் கல்வியமைச்சர் வெளியிட்ட தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார் என்பதை ஜனாதிபதி ஆணைக்குழு தெளிவுபடுத்தும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதலுக்கு கல்வி அமைச்சர் பொறுப்பு கூற வேண்டியவரல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களுக்கான உள்ளடக்கங்கள், மத புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் நூல்கள் தயாரிக்கப்படும் போது எனது தலையீடு குறித்து வினவப்பட்டது.

இவற்றை பேராசிரியர்கள், கலாநிதிகள் ஆகியோரே தயாரிக்கின்றனர். இதில் கல்வி அமைச்சர் என்ற ரீதியில் அமைச்சர் தலையிடுவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.