நாடாளுமன்றத் தேர்தல் 2020: ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் விபரம் அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் 2020: ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் விபரம் அறிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடும் நிலையில் அதன் வேட்பாளர்களின் பெயர்களும் அவர்களுக்கான விருப்பு வாக்கு இலக்கங்களும் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில்,

அப்துல் சமியூ முகம்மது பஸ்மி – ஐக்கிய தேசியக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர்
உடக்கே ஆராச்சிலாக்கே மகிந்த குலரத்ன- வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்
கந்தையா தில்லைமோகன் – கல்வியலாளர்
ஜேம்ஸ் பிரிம்லஸ் கொஸ்டா – தலைமை வேட்பாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட முகாமையாளர் மற்றும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சின் முன்னால் இணைப்புச் செயலாளர்
தட்சணாமூர்த்தி கிருபாகரன் – வர்த்தகர்
பயக்கல பதுக்கே டொண் ஜோய் வில்பிரட் நாணயகார – ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்
முத்துசாமி முகுந்தகஜன் – முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர், ஐக்கிய தேசியக் கட்சியின் முல்லை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்
விக்கிரமசிங்க ஆராச்சிலாகே ஆரிய ரத்ன- வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் மற்றும் ஒய்வுநிலை உதவி வங்கி முகாமையாளர்
சிறில் அப்புகாமி ஜுட் அமல்ராஜ் – சமூக செயற்பாட்டாளர் ஆகியோர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

ஐக்கிய தேசியக் கட்சி வன்னி மாவட்டத்தில் கடந்த 20 வருடங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்ட நிலையில், இம்முறை நடைபெறும் பொதுத்தேர்தலில் வேறு கட்சிகளுடன் இணையாது முழுமையாக தனது வேட்பாளர்களையே வன்னி மாவட்டத்தில் நேரடியாக களமிறக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.