அமெரிக்க அதிபரின் மூத்த சகோதரர் ரொபட் ட்ரம்ப் காலமானார்

அமெரிக்க அதிபரின் மூத்த சகோதரர் ரொபட் ட்ரம்ப் காலமானார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மூத்த சகோதரர் ரொபட் ட்ரம்ப் காலமாகியுள்ளார்.

மேன்ஹெட்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மறைவை வெள்ளை மாளிகையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரொபட் டிரம்ப் தனது சகோதரர் மட்டுமல்ல, எனது சிறந்த நண்பரும் ஆவார் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அவரது இழப்பு மிகவும் சோகமானதொரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அவரது நினைவுகள் தனது இதயத்தில் என்றும் நிலைத்திருக்கும் என்றும் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டார்.