அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரிஸின் முதன்மை ஆலோசகரான யாழ். தமிழ் பெண்

அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரிஸின் முதன்மை ஆலோசகரான யாழ். தமிழ் பெண்

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் துணை ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹரிஸின் புதிய அலுவலக பிரதானியாக இலங்கைப் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இலங்கை - அமெரிக்க வம்சாவழியைச் சேர்ந்த ரோஹினி கொசோக்லு என்ற பெண் உத்தியோகப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அலுவலக பிரதானி பதவியில் நியமிக்கப்பட்ட முதல் ஆசிய அமெரிக்க பெண் ரோஹினி கொசோக்லு ஆவார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதில் துணை ஜனாதிபதி வேட்பாளராக கலிபோர்னியா செனட்சபை உறுப்பினர் கமலா ஹரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.