மைத்திரிக்கு ஆப்பு! எதிர் பார்த்த மற்றொரு பதவியும் இல்லை?

மைத்திரிக்கு ஆப்பு! எதிர் பார்த்த மற்றொரு பதவியும் இல்லை?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்காக அரசியல் அமைப்பு திருத்தத்தின் ஊடாக துணை பிரதமர் பதவியை உருவாக்கி வழங்குவதற்கு அரச உயர் மட்டத்தில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நெருக்கமாக உள்ள முக்கிய பிரமுகர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அரசியலமைப்பிற்கு வெளியே புதிய பதவிகளை உருவாக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றம் கூடிய பின்னர் துணைப் பிரதமர் என்கிற ஒரு பதவியை ஏற்படுத்தி அதனை மைத்திரிபால சிறிசேனவுக்கு கொடுக்க அரச தரப்பு தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகார விசாரணையில் மைத்திரியின் பெயர் இருப்பதுடன். அவருக்கெதிராக பாரதூர குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, துணைப்பிரதமர் என்கிற பதவியை வழங்குவதை அரச உயர்பீடம் தவிர்க்க முடிவெடுத்திருப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.